இட ஒதுக்கீடானது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் முன்னேற்றம் அடைய முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வொதுக்கீடானது கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் மாநில அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று இவ்வகுப்பினர் பொருளாதாரம் மற்றும் கல்வியில் மேம்பாடு அடைய வழிவகை செய்கிறது. தற்போது வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு விவரம் பின்வருமாறு :-
|
பிற்படுத்தப்பட்டவகுப்பினர் |
26.5% |
|---|---|
|
பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் |
3.5% |
|
மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் * Part I - வன்னியகுல சத்திரியர் - 10.5 % *Part II - மிபிவ மற்றும் சீர்மரபினர் -7.0 % *Part III - மிபிவ - 2.5 % |
20% * |
|
ஆதிதிராவிடர் (15% ) ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) (3%) |
18% |
|
பழங்குடியினர் |
1 % |
|
மொத்தம் |
69 % |





